கோவை பெங்களூரு வந்தே பாரத் ரயில் பயணிகளின் கவனத்திற்கு மார்ச் 15 முதல் நேர மாற்றம்

கோவை பெங்களூரு வந்தே பாரத் ரயில் பயணிகளின் கவனத்திற்கு மார்ச் 15 முதல் நேர மாற்றம்

கோவை – பெங்களூரு இடையே இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் (20642) நேரத்தில் தென்மேற்கு ரயில்வே அதிரடி மாற்றம் செய்துள்ளது. வரும் மார்ச் 15 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றத்தின்படி, ஓசூர் நிலையத்திற்கு இந்த ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக வந்து செல்லும். அதன்படி, மதியம் 12:03 மணிக்கு பதிலாக 12:13 மணிக்கு ஓசூர் வந்தடைந்து, 12:15 மணிக்கு அங்கிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கும் இந்த ரயில், கோவையிலிருந்து காலை 07:25 மணிக்குப் புறப்படுகிறது. ஓசூர் தவிர மற்ற நிலையங்களின் ரயில் நேரங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏசி சேர் கார் வகுப்பிற்கு ரூ. 1,260 மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கு ரூ. 2,190 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பயண நேர மாற்றத்தை கவனத்தில் கொண்டு பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *