தன்னைத் தீர்த்துக்கட்ட சதி நடப்பதாகக் கூறி தேஜ் பிரதாப் யாதவ் பரபரப்பு புகார்
February 9, 2026

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ், முன்னாள் எம்.எல்.ஏ முகேஷ் ரோஷன் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகப் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனது தந்தை சந்தித்தது போன்றே பொய் வழக்குகளில் தன்னைச் சிக்க வைத்து, வீட்டை விட்டு வெளியேற்ற “ஐந்து ஜெய்சந்த்கள்” சதி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் சஞ்சய் யாதவ், சக்தி சிங் உள்ளிட்டோரின் பெயர்களைக் குறிப்பிட்ட அவர், தனது பெயருக்குக் களங்கம் விளைவிப்பவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், இந்தச் சதித் திட்டங்கள் குறித்துப் பிரதமரை நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாகவும், ஒரு கட்டத்தில் இத்தகைய மன உளைச்சலால் தற்கொலை எண்ணம் கூட ஏற்பட்டதாகவும் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.