கேஸ் தட்டுப்பாட்டால் விடுதிகளில் டீ காபி மற்றும் தோசைக்குத் தடை விதிப்பு
March 10, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு ஐடி மற்றும் பிஜி விடுதி உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி தற்காலிகமாக டீ, காபி, தோசை மற்றும் சப்பாத்தி வழங்கப்பட மாட்டாது. சாம்பார் போன்ற கூடுதல் உணவுகளுக்குப் பதிலாக சட்னி மட்டுமே வழங்கப்படும் என்றும், அதற்கு மாற்றாக முட்டை மற்றும் வெரைட்டி ரைஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.