கேப்டன் மார்ஷ் அவுட்: ஸ்மித்தின் அதிரடி வருகை ஆஸ்திரேலியாவை காப்பாற்றுமா?

கேப்டன் மார்ஷ் அவுட்: ஸ்மித்தின் அதிரடி வருகை ஆஸ்திரேலியாவை காப்பாற்றுமா?

டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கும் முன்பே ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தடுத்து பலத்த அடிகள் விழுந்து வருகின்றன. ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸைத் தொடர்ந்து, தற்போது கேப்டன் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் குணமடைய நீண்ட ஓய்வு தேவை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. மார்ஷ் இல்லாத நிலையில், டிராவிஸ் ஹெட் தற்காலிக கேப்டனாக அணியை வழிநடத்துகிறார்.

மார்ஷிற்குப் பதிலாக அனுபவ வீரர் ஸ்டீவ் ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக வெறும் 41 பந்துகளில் அதிரடி சதம் விளாசி ஸ்மித் மிரட்டலான ஃபார்மில் உள்ளார். சுமார் 60 சராசரி மற்றும் 167 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஸ்மித் மீண்டும் அணிக்குத் திரும்புவது, ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தற்போது இலங்கையில் உள்ள தனது அணியுடன் இணையப் புறப்பட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *