குழிக்குள் விழுந்த கழுதைக்கு எமனாக வந்த மண் எப்படி ஏணியாக மாறியது தெரியுமா
December 29, 2025

விவசாயி ஒருவரின் வயதான கழுதை வறண்ட கிணறு ஒன்றில் தவறி விழுந்தது. அதை மீட்பது கடினம் என கருதிய கிராம மக்கள், உயிருடன் இருக்கும்போதே அதன் மீது மண்ணைப் போட்டு புதைக்க முடிவு செய்தனர். ஆனால் மரண பயத்தில் முடங்கிவிடாமல், தன் மீது விழும் ஒவ்வொரு பிடி மண்ணையும் உதறித் தள்ளி அதன் மீதே ஏறி நின்றது அந்த புத்திசாலி கழுதை.
மண் குவியக் குவிய கிணற்றின் ஆழம் குறையத் தொடங்கியது. இறுதியில் அந்த மண் குவியலின் உதவியுடன் கழுதை கிணற்றை விட்டு வெளியே குதித்து உயிர் பிழைத்தது. சோதனைகளை சாதனைகளாக மாற்றும் நேர்மறை எண்ணம் இருந்தால், எந்த ஒரு இக்கட்டான சூழலிலிருந்தும் மனிதர்கள் மீண்டு வர முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த பாடமாகும்.