குப்பையில் வீசும் பப்பாளி விதைகளில் ஒளிந்துள்ள ஆச்சரியமான மருத்துவ ரகசியங்கள்

பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளைத் தூக்கி எறிவது பலரது வழக்கம், ஆனால் அந்த விதைகளில் தான் உடலுக்குத் தேவையான அபரிமிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. குறிப்பாக, இதிலுள்ள பாலிஃபீனால்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுத்து உடலுக்குப் பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகின்றன.
செரிமானப் பிரச்சனைகள் மற்றும் குடல் புழுக்களை நீக்குவதில் பப்பாளி விதைகளின் பங்கு மிக முக்கியமானது. இதிலுள்ள ‘கார்பைன்’ எனும் வேதிப்பொருள் குடலைச் சுத்தமாக வைத்திருப்பதுடன் உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளைச் சரிசெய்யவும், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் இவை மருந்தாகப் பயன்படுகின்றன. ஆரோக்கியமான வாழ்விற்கு இந்த விதைகளை உலர வைத்துப் பொடியாக்கி உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும்.