கிரிக்கெட் ரத்தத்தில் ஊறிய வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல் அனைத்து போட்டிகளிலிருந்தும் ஓய்வு

கிரிக்கெட் ரத்தத்தில் ஊறிய வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல் அனைத்து போட்டிகளிலிருந்தும் ஓய்வு

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல் தனது 17 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கிரிக்கெட் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், 2011 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். கடந்த 12 ஆண்டுகளில் நியூசிலாந்து அணிக்காக 69 போட்டிகளில் விளையாடி 120 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 900 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். இவரது சிறப்பான பங்களிப்பை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் பாராட்டியுள்ளது.

ஒட்டுமொத்தமாக 329 போட்டிகளில் விளையாடியுள்ள பிரேஸ்வெல், 637 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். பேட்டிங்கிலும் 7000 ரன்களுக்கு மேல் குவித்து ஆல்-ரவுண்டராக ஜொலித்தார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய ஒரே போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க டி20 மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்களிலும் விளையாடிய அனுபவம் கொண்ட இவர், தற்போது தனது நீண்ட கால கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *