காவல்துறை அதிகாரி இல்லம் அருகே தொழிலதிபர் சுட்டுக்கொலை
February 14, 2026

டேராடூனில் உள்ள மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் இல்லத்திற்கு மிக அருகிலேயே தொழிலதிபர் விக்ரம் சர்மா மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த அவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொல்லப்பட்ட விக்ரம் சர்மா மீது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கு நிலவும் கும்பல் மோதல்களின் பின்னணியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அடுத்தடுத்து நடக்கும் இத்தகைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.