கார் பயணத்தில் பயங்கரம் லிவ் இன் பார்ட்னரின் தலையை துண்டித்த காதலன்

கார் பயணத்தில் பயங்கரம் லிவ் இன் பார்ட்னரின் தலையை துண்டித்த காதலன்

சஹாரன்பூரைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் பிலால், தனது லிவ்-இன் பார்ட்னர் உமாவை கொடூரமாகக் கொலை செய்ததற்காக அவரது திருமண நாளன்று கைது செய்யப்பட்டார். தன்னை திருமணம் செய்யுமாறு உமா வற்புறுத்தியதால், அவரை காரில் அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி பெல்ட்டால் கழுத்தை நெரித்துக் கொன்றார். அடையாளத்தை மறைக்க உமாவின் தலையை துண்டித்து காட்டில் வீசினார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய உமாவின் தலையை மட்டும் பார்த்து அவரது தந்தை அடையாளம் காட்டினார். திருமண ஆசையில் இருந்த பிலால் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உமாவின் உடல் பாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *