காரில் நெருக்கமாக இருந்தபோது காதலியின் தலையை துண்டித்த பிலால், திருமண நாளன்று சிக்கிய கொலையாளி

உத்தரபிரதேசத்தில் லிவ்-இன் உறவில் இருந்த உமா என்ற பெண்ணை கொடூரமாக கொலை செய்த டாக்ஸி டிரைவர் பிலாலை போலீஸார் கைது செய்தனர். பிலாலுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகியிருந்ததால், தன்னை திருமணம் செய்ய வற்புறுத்திய உமாவை திட்டமிட்டு கொலை செய்துள்ளான். கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி, காரில் நெருக்கமாக இருந்தபோது உமாவின் கழுத்தை நெரித்து, இறைச்சி வெட்டும் கத்தியால் தலையை துண்டித்து உடலை வெவ்வேறு மாநில எல்லைகளில் வீசியுள்ளான்.
உமா 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமண நாளன்று வீட்டை விட்டு வெளியேறியவர். தனது கணவரை பிரிந்து பிலாலுடன் வசித்து வந்த நிலையில் இந்த கொடூரம் நடந்துள்ளது. கொலையை மறைத்துவிட்டு தனது திருமண வேலைகளில் பிஸியாக இருந்த பிலாலை, திருமண மேடையிலேயே போலீஸார் கைது செய்தனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகளின் துண்டிக்கப்பட்ட தலையை பார்த்து தந்தை அடையாளம் காட்டினார்.