காட்பாடியில் எம்ஜிஆருக்கு மூன்று கோடியில் கட்டப்பட்ட மும்மத நல்லிணக்க ஆலயம்
March 9, 2026

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கரசமங்கலத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமச்சந்திரா அறக்கட்டளையின் நிர்வாகி டி.ஆர். முரளி முயற்சியால் உருவான இந்த ஆலயத்தின் கோபுரங்கள் இந்து, கிறித்துவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களின் அடையாளங்களுடன் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று நடைபெற்ற இக்கோவில் கும்பாபிஷேக விழாவில் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன்னாலான எம்ஜிஆர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னாள் மேயர் சைதை துரைசாமி மற்றும் தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.