காசி அல்ல! சீதையின் ஆசையை நிறைவேற்ற பிரயாக்ராஜில் ராமர் ஸ்தாபித்த சிவலிங்கம்!

திர்த்தங்களின் அரசன் என்று அழைக்கப்படும் பிரயாக்ராஜில் புனித யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள பழமையான மன்காமேஷ்வர் கோவில் ஒரு சிறப்பு வாய்ந்த புனிதத் தலமாகும். இங்கு வந்து மகாதேவரை வழிபட்டால், பக்தர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. திரேதா யுகத்தில், வனவாசத்தின்போது, சீதா தேவியின் விருப்பத்தை நிறைவேற்ற, ஸ்ரீ ராமர் இங்கேயே சிவலிங்கத்தை ஸ்தாபித்ததாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், சாவன் மாதம் மற்றும் மகா சிவராத்திரியின்போது இங்கு ருத்ராபிஷேகம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் கூடுவர். மன்காமேஷ்வர் சிவனைத் தவிர, சித்தேஷ்வர் மற்றும் ருண்முக்தேஷ்வர் மகாதேவரின் சிவலிங்கங்களும் இங்கு உள்ளன. இக்கோவிலை பிரயாக்ராஜ் சந்திப்பு அல்லது சங்கமத்திலிருந்து ஆட்டோ மூலம் எளிதாக அடையலாம். பக்தர்கள் இங்கு யமுனை நதிக்கரையில் படகுப் பயணத்தையும் அனுபவிக்கலாம்.