கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல மனைவி திட்டம் மிரட்டி பணம் பறித்த அதிர்ச்சி சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் தனது மனைவியே தன்னைக் கொல்லச் சதி செய்வதாகக் கூறி கணவர் ஒருவர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். பத்து ஆண்டு காலத் திருமண வாழ்க்கை மற்றும் நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஓராண்டாகத் தனது மனைவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதாக அவர் புகார் அளித்துள்ளார். மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை பிளாக்மெயில் செய்து, ஆபாச வீடியோக்களைக் காட்டி மிரட்டி கள்ளக்காதலனின் வங்கி கணக்கிற்குப் பணம் அனுப்பவும் அவர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
தன்னைக் கொலை செய்ய மனைவியும் அவரது கள்ளக்காதலனும் திட்டமிடும் ஆடியோ ஆதாரத்தைக் கணவர் கண்டுபிடித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டிலிருந்த இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் மனைவி திருடித் தனது காதலனிடம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட கணவனின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மனைவியின் இந்த விபரீத திட்டம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.