கள்ளக்காதலனுடன் சேர கணவனை விஷம் வைத்து கொன்று திருமணம் செய்த மனைவி

கள்ளக்காதலனுடன் சேர கணவனை விஷம் வைத்து கொன்று திருமணம் செய்த மனைவி

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் கடந்த 11 மாதங்களாக மர்மமாக இருந்த கொலை வழக்கை போலீசார் தற்போது உடைத்துள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி சங்கர் சிங் லோதா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். முதலில் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட மரணம் என்று கருதப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது. விசாரணையில், சங்கரின் மனைவி ரூபிக்கும் அவரது உறவினர் ஹரேந்திர சிங்கிற்கும் இடையே இருந்த கள்ளக்காதலே இந்த கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்த சங்கரை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டனர். சம்பவத்தன்று ஹரேந்திர சிங், சங்கரை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று அவர் குடித்த மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்துள்ளார். சங்கர் இறந்த பிறகு, ரூபி தனது கள்ளக்காதலனுடன் தப்பியோடி அவரைத் திருமணம் செய்து கொண்டார். நீண்ட தேடலுக்குப் பிறகு, அறிவியல் பூர்வ ஆதாரங்களுடன் போலீசார் தற்போது குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *