கல்லடைப்பு வலிக்கு சிகிச்சை பெற வந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்தது அதிர்ச்சியில் கணவன் கலாட்டா

கல்லடைப்பு வலிக்கு சிகிச்சை பெற வந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்தது அதிர்ச்சியில் கணவன் கலாட்டா

செய்தி பிரிவு : உத்தரபிரதேச மாநிலம் ஏட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் வினோதமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லடைப்பு வலி என்று சிகிச்சைக்கு வந்த பெண் ஒருவருக்கு திடீரென ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவர்கள் முன்னதாகவே அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேட்டபோது அந்தப் பெண் மறுத்துள்ளார். ஆனால் ஊசி செலுத்திய சிறிது நேரத்திலேயே கழிவறையில் அவருக்கு பிரசவம் நடந்துள்ளது.

இந்த தகவலை அறிந்த அந்த பெண்ணின் கணவன் மருத்துவமனையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் கடந்த ஒரு வருடமாக வெளியூரில் வேலை பார்த்து வருவதாகவும் அப்படி இருக்கையில் மனைவிக்கு குழந்தை பிறந்தது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கிடையில் குறைப்பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக ஆக்ராவிற்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *