கலப்பட பால் மற்றும் பன்னீர் விற்பனைக்கு இனி முற்றுப்புள்ளி

கலப்பட பால் மற்றும் பன்னீர் விற்பனைக்கு இனி முற்றுப்புள்ளி

பால், கோவா மற்றும் பன்னீரில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. பெருகிவரும் புகார்களைத் தொடர்ந்து, உரிமம் இன்றி இயங்கும் நிறுவனங்கள் மற்றும் போலி தயாரிப்புகளை விற்பனை செய்பவர்களைக் கண்டறிய நாடு தழுவிய சிறப்பு சோதனை நடத்தப்பட உள்ளது.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாதிரிகளைச் சேகரித்து வணிக உரிமங்களை ஆய்வு செய்வார்கள். விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். இந்த நடவடிக்கைகள் குறித்த தரவுகளை உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *