கன்னியாகுமரியில் தாயைக் கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி மற்றும் காதலன் கைது

கன்னியாகுமரியில் தாயைக் கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி மற்றும் காதலன் கைது

கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளையார்புரத்தில் காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயையே கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி ஸ்ருதி மற்றும் அவரது காதலன் அபிலாஷை போலீசார் கைது செய்தனர். அக்காவின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 10 சவரன் நகையை ஸ்ருதி திருடி தனது காதலனிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்து தாய் கலாவதி கண்டித்து நகையை திரும்ப கேட்டதால் இந்த கொடூர முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த அபிலாஷ் தகராறில் ஈடுபட்டு கலாவதியை கட்டையால் தாக்க, கீழே விழுந்த தாயை ஸ்ருதி தனது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கலாவதி அளித்த புகாரின் பேரில், சுசீந்திரம் போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *