கனடா பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசு பெரும்பான்மையை நோக்கி அதிரடி பயணம்
March 11, 2026

கனடாவின் சிறுபான்மை லிபரல் அரசு தற்போது பெரும்பான்மை பலத்தை எட்டும் நோக்கில் வேகமாக முன்னேறி வருகிறது. என்டிபி கட்சியைச் சேர்ந்த லோரி இட்லவுட் லிபரல் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, ஆளும் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. இட்லவுட்டின் இந்த முடிவை ஜனநாயகத்திற்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், லிபரல் கட்சி அவரை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளது.
ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள மூன்று முக்கிய இடைத்தேர்தல்கள் கனடா அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதிகளில் லிபரல் கட்சி வெற்றி பெற்றால், மொத்தம் 173 இடங்களுடன் மார்க் கார்னி அரசு முழுமையான பெரும்பான்மை பலத்தைப் பெறும். இதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எவ்வித தடையுமின்றி ஆட்சியைத் தொடர பிரதமர் கார்னிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.