ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள் பயன்படுத்துவது எப்படி இதோ எளிய வழிமுறை

இனி தனிப்பட்ட மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை ஒரே போனில் மிக எளிதாகப் பயன்படுத்தலாம். வாட்ஸ்அப்பின் ‘மல்டி அக்கவுண்ட்’ அம்சம் பயனர்கள் ஒரே செயலியில் இரண்டு வெவ்வேறு எண்களை இணைக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் சாட்கள் மற்றும் அழைப்புகள் தனித்தனியாக நிர்வகிக்கப்படுவதால் பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது. கூடுதல் மொபைல் போன்கள் அல்லது மூன்றாம் தரப்பு செயலிகளின் தேவை இன்றி இது பாதுகாப்பாகச் செயல்படுகிறது.
இந்த வசதியைப் பெற உங்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று ‘Add Account’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்கள் இரண்டாவது மொபைல் எண்ணைப் பதிவு செய்து ஓடிபி மூலம் சரிபார்ப்பை முடிக்க வேண்டும். இந்தச் செயல்முறை முடிந்தவுடன் ஒரே மொபைலில் இரண்டு கணக்குகளும் தயாராகிவிடும். தேவைப்படும்போது நீங்கள் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு எளிதாக மாறிக் கொள்ளலாம், இது இரண்டு சிம் கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.