ஒரு 100 ரூபாய் நோட்டை அச்சடிக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா
December 17, 2025

இந்திய ரிசர்வ் வங்கி ஒரு 100 ரூபாய் நோட்டை அச்சடிக்க எவ்வளவு செலவு செய்கிறது என்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஒரு நோட்டை உருவாக்க சுமார் ₹1.77 செலவாகிறது. நாசிக், தேவாஸ், மைசூர் மற்றும் சால்போனி ஆகிய இடங்களில் உள்ள அச்சகங்களில் பருத்தி மற்றும் லினன் இழைகளைப் பயன்படுத்தி இந்த நோட்டுகள் தரமாகத் தயாரிக்கப்படுகின்றன.
கள்ள நோட்டுகளைத் தவிர்க்க இதில் வாட்டர்மார்க் மற்றும் நிறம் மாறும் பாதுகாப்பு நூல் போன்ற நவீன அம்சங்கள் உள்ளன. இந்த நோட்டின் பின்புறம் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியமான ‘ராணி கி வாவ்’ சின்னம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.