ஐசிசி வெளியிட்ட டி20 உலகக்கோப்பை கனவு அணியில் 4 இந்திய வீரர்கள் மகுடம்

ஐசிசி வெளியிட்ட டி20 உலகக்கோப்பை கனவு அணியில் 4 இந்திய வீரர்கள் மகுடம்

2026 டி20 உலகக்கோப்பை தொடரின் சிறந்த வீரர்களைக் கொண்டு அதிகாரப்பூர்வ அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திரங்களான சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய நால்வர் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர். இத்தொடரின் நாயகன் சஞ்சு சாம்சன் இந்த அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் தரப்பில் அதிக ரன்கள் குவித்த சாகிப்சாதா ஃபர்ஹான் மட்டுமே இடம்பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்த அணியில், இங்கிலாந்தின் வில் ஜாக்ஸ், அடில் ரஷித் மற்றும் ஜிம்பாப்வேயின் முசரபானி உள்ளிட்ட சர்வதேச நட்சத்திரங்கள் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் வரிசையை பலப்படுத்துகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *