ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை
December 17, 2025

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தனிப்பட்ட வாழ்க்கையின் சவால்களுக்கு மத்தியிலும் உலக அரங்கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் தரவரிசையில் அவர் மீண்டும் உலகின் முதலிட பேட்டராக உருவெடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்டை பின்னுக்குத் தள்ளி 811 ரேட்டிங் புள்ளிகளுடன் மந்தனா முதலிடத்தைப் பிடித்தார். வோல்வார்ட் 806 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். ஸ்மிருதியின் இந்த அபார வளர்ச்சி அவரது விடாமுயற்சி மற்றும் திறமைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.