ஏர் இந்தியா விமான கட்டண உயர்வு பயணிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஏர் இந்தியா விமான கட்டண உயர்வு பயணிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஈரான் போர் சூழலால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்களை ஏர் இந்தியா உயர்த்தியுள்ளது. விமான இயக்கச் செலவு 40 சதவீதம் அதிகரித்துள்ளதால் மூன்று கட்டங்களாக இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுகிறது. மார்ச் 12 முதல் இந்தியா மற்றும் சார்க் நாடுகளுக்கான கட்டணம் 399 ரூபாயும், மார்ச் 18 முதல் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க வழித்தடங்களில் 10 முதல் 30 டாலர் வரையும் உயர்கிறது.

இந்த கட்டண உயர்வு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. ஆனால் பயணத் தேதி அல்லது வழித்தடத்தை மாற்றினால் புதிய கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் தட்டுப்பாடே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *