எஸ்சி எஸ்டி பிரிவினரை அவமதிப்பது எப்போதும் கொடுமையாகாது உயர்நீதிமன்றம் அதிரடி

எஸ்சி எஸ்டி பிரிவினரை அவமதிப்பது எப்போதும் கொடுமையாகாது உயர்நீதிமன்றம் அதிரடி

அரசு அல்லது தனியார் பணியிடங்களில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுடன் ஏற்படும் நிர்வாக ரீதியான கருத்து வேறுபாடுகள் அனைத்தும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராது என்று கல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுவெளியில் சாதி ரீதியாக வேண்டுமென்றே அவமதிக்கும் நோக்கம் இருந்தால் மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும் என்று நீதிபதி சைதாலி சாட்டர்ஜி தாஸ் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார்.

சமஸ்கிருதக் கல்லூரி பேராசிரியை ஒருவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம், தொழில்முறை புகார்களை சாதிய ஒடுக்குமுறையாகக் கருத முடியாது எனக் கூறியது. குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் பொதுப்பார்வையில் நடக்கவில்லை என்பதால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *