எப்ஸ்டீன் மருத்துவ ரகசியங்கள் அம்பலம்: பாலியல் நோய்கள் மற்றும் அந்தரங்க சிகிச்சைகள் குறித்த அதிர்ச்சி தகவல்!

அமெரிக்க நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன் குறித்த சமீபத்திய நீதித்துறை ஆவணங்கள் அவரது அந்தரங்க உடல்நலம் சார்ந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக அவர் குறைந்த அளவு டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தது மருத்துவ சோதனைகளில் உறுதியானது. 2016-ல் அவருக்கு கோனோரியா (Gonorrhoea) எனும் பாலியல் தொற்று நோய் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் உரையாடல்கள் மூலம் அவருக்கு ஆண் உறுப்பு விரிவாக்க மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டதும், ஹார்மோன் சிகிச்சையின் பக்கவிளைவுகளால் அவர் அவதிப்பட்டதும் தெரியவந்துள்ளது. சிறுநீரில் இரத்தம் மற்றும் ஒட்டுண்ணி பாதிப்புகளையும் அவர் எதிர்கொண்டார். 2019-ல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட எப்ஸ்டீனின் இந்த ரகசிய மருத்துவ அறிக்கைகள் தற்போது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.