எத்தியோப்பியாவின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது

எத்தியோப்பியாவின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ வழங்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் டாக்டர் அபி அகமது அலி இந்த விருதை வழங்கினார். இது மோடி பெறும் 28-வது சர்வதேச விருதாகும்.

இஸ்ரேல் பயணத்தில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இது இந்தியர்களுக்கு பெருமையான தருணம் என்றார். உலகளாவிய தெற்கு நாடுகளுக்கான மோடியின் அர்ப்பணிப்பு மற்றும் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தியதற்கான அங்கீகாரம் இது என அவர் புகழாரம் சூட்டினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *