உத்தரகண்டில் ஒரு கோடி மதிப்பிலான போதை ஊசிகள் பறிமுதல் செய்து போலீசார் அதிரடி
December 17, 2025

உத்தரகண்ட் மாநிலம் உதம் சிங் நகரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போலீசார் நடத்திய சோதனையில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. காசிப்பூரில் உள்ள ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், சுமார் 1.32 கோடி ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
மொத்தம் 43,950 ஊசிகள் பிடிபட்ட நிலையில், இதனை வரவழைத்த முக்கிய குற்றவாளியான ரிபுல் சௌகான் என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கடத்தல்காரனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.