உதய்பூர் ஆக்ரா வந்தே பாரத் ரயில் சேவை திடீர் நிறுத்தம் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சி

உதய்பூர் ஆக்ரா வந்தே பாரத் ரயில் சேவை திடீர் நிறுத்தம் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சி

பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் உதய்பூர் சிட்டி முதல் ஆக்ரா கண்டோன்மென்ட் வரையிலான வந்தே பாரத் ரயில் சேவை வரும் ஞாயிறு முதல் நிறுத்தப்படுகிறது. செப்டம்பர் 2024-ல் தொடங்கப்பட்ட இந்த அதிவேக ரயில் சனிக்கிழமை தனது கடைசி பயணத்தை மேற்கொள்ளும். குறைவான நிறுத்தங்கள் காரணமாக இருக்கைகள் நிரம்பாததே இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த ரயிலை உதய்பூரிலிருந்து அகமதாபாத் அசர்வா வரை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சுற்றுலா சீசனில் இந்த சேவை நிறுத்தப்படுவது ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் ஆக்ரா வழித்தடத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை மூன்றாக குறைந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *