உடலில் தோன்றும் இந்த 10 மாற்றங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம் அலட்சியப்படுத்தாமல் உடனே கவனியுங்கள்

உடல் நலக்குறைவு என்பது இயல்பானது என்றாலும், சில மாற்றங்கள் மரணத்தின் முன்கூட்டிய அறிகுறிகளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பசியின்மை, தொடர்ச்சியான உடல் சோர்வு மற்றும் வெயில் காலத்திலும் நடுக்கம் ஏற்படுவது போன்றவை உடலில் ஏதோ பெரிய பாதிப்பு இருப்பதைக் குறிக்கின்றன. மேலும் மூச்சுத்திணறல், திடீர் உடல் எடை குறைவு அல்லது கணுக்கால் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.
வேலையில் கவனமின்மை, மறதி மற்றும் மாயத்தோற்றங்கள் (Hallucinations) போன்றவை நரம்பு மண்டல பாதிப்பின் தீவிர அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. கை மற்றும் கால் விரல்கள் அடிக்கடி குளிர்ந்து போவது இரத்த ஓட்ட பாதிப்பைக் காட்டுகிறது. இத்தகைய 10 முக்கியமான மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது உயிரிழப்பு அபாயத்தைத் தவிர்க்க உதவும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.