உங்கள் நாக்கின் நிறம் இதய செயலிழப்பை முன்கூட்டியே எச்சரிக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை இப்போது உங்கள் நாக்கின் நிறத்தை வைத்தே கண்டறிய முடியும். பொதுவாக ஆரோக்கியமான நாக்கு வெளிர் சிவப்பு நிறத்திலும், மெல்லிய வெள்ளை படலத்துடனும் காணப்படும். ஆனால், நாக்கின் நிறம் மாறினாலோ அல்லது மஞ்சள் நிற படலம் படிந்திருந்தாலோ அது இதய செயலிழப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது அது நாக்கின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை பரிசோதிப்பது போலவே நாக்கின் மாற்றங்களையும் கவனிப்பது அவசியம். நாக்கில் தொடர்ந்து பழுப்பு அல்லது வெள்ளை புள்ளிகள் காணப்பட்டால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். ஆரம்பத்திலேயே இத்தகைய மாற்றங்களை கண்டறிந்து சிகிச்சை பெறுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். முறையான வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலம் தீவிர இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.