உங்கள் சேமிப்பை அழித்து உங்களை ஏழையாக்கும் இந்த 5 சிறிய தவறுகள்
December 16, 2025

கடினமாக உழைத்தும் கையில் பணம் தங்கவில்லையா? காப்பீட்டை முதலீடாகக் கருதுவது, கிரெடிட் கார்டில் குறைந்தபட்சத் தொகையை மட்டும் செலுத்துவது மற்றும் போதிய அறிவின்றி முதலீடு செய்வது போன்றவை உங்களை மெதுவாக வறுமையில் தள்ளும். இந்த நிதி தவறுகள் உங்கள் எதிர்கால பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் அபாயம் கொண்டவை.
வருமானம் அதிகரிக்கும் போது ஆடம்பரச் செலவுகளைக் கூட்டுவதும், ஒரே இடத்தில் முதலீடு செய்வதும் பாதுகாப்பற்றது. முதலீடுகளைப் பிரித்து மேற்கொள்வதும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதும் அவசியம். இந்த நிதி ரீதியான ஒழுக்கத்தை இப்போதே கடைப்பிடித்தால் மட்டுமே நீண்ட காலப் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தப்பித்து வளமான வாழ்வைப் பெற முடியும்.