ஈரான் தற்கொலை படை படகு தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு

ஈரான் தற்கொலை படை படகு தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு

ஈராக்கின் கோர் அல் ஜுபைர் துறைமுகத்திற்கு அருகே ஈரான் நடத்திய தற்கொலை படை படகு தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மார்ஷல் தீவுகளின் கொடியுடன் சென்ற ‘செப்சி விஷ்ணு’ என்ற எண்ணெய் கப்பலை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. கப்பலில் இருந்த மற்ற 27 பணியாளர்கள் மீட்கப்பட்டு ஈராக்கின் பஸ்ரா நகருக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்திற்கு கப்பல் நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், சர்வதேச கடல் பகுதியில் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தத் தாக்குதல் இந்திய கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *