ஈரானில் போராட்டம் உச்சத்தில் இருக்கும் நிலையில் உச்ச தலைவர் காமேனி மாயம் அடுத்த தலைவர் யார்
January 2, 2026

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த டிசம்பர் 25 முதல் உச்ச தலைவர் அலி காமேனி பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அதிபர் மசூத் பெசெஷ்கியனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கையில் ஏழு பேர் கொல்லப்பட்ட நிலையில், ஈரானில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
காமேனியின் மௌனம் காரணமாக அவரது வாரிசு குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. அவரது மகன் மோஜ்தபா காமேனி மற்றும் ஹுசைன் கொமேனி ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. இஸ்ரேல் உடனான மோதலுக்கு மத்தியில், உள்நாட்டுப் போராட்டங்களும் உச்ச தலைவரின் உடல்நிலையும் ஈரான் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.