ஈரானின் 50 போர் கப்பல்களை மூழ்கடித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல்

ஈரானின் 50 போர் கப்பல்களை மூழ்கடித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ஈரானிய போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் (CENTCOM) அறிவித்துள்ளது. இதில் ஈரானின் அதிநவீன ட்ரோன் தாங்கிக் கப்பலான IRIS Shahid Bahman Bagheri மற்றும் மிகப்பெரிய மிதக்கும் ராணுவத் தளமான IRIS Makran ஆகியவையும் அடங்கும். கடந்த 11 நாட்களில் நடந்த இந்த உக்கிரமான போரால் ஈரானிய கடற்படைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானின் 5,000-க்கும் மேற்பட்ட இடங்களை இலக்கு வைத்துள்ளன. இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பக்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படைத் தலைமையகம் சேதமடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து வரும் இந்த மோதலால் அப்பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *