இந்தியாவில் சமையல் எரிவாயு உற்பத்தி 31 சதவீதம் உயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு குறித்த அச்சத்திற்கு முற்றுப்புள்ளி

இந்தியாவில் சமையல் எரிவாயு உற்பத்தி 31 சதவீதம் உயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு குறித்த அச்சத்திற்கு முற்றுப்புள்ளி

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உள்நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தி 31 சதவீதம் அதிகரித்துள்ளது. போர்ச் சூழலால் சிலிண்டர் முன்பதிவு 88.8 லட்சமாக உயர்ந்த போதிலும், போதிய இருப்பு உள்ளதால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எரிவாயு விநியோகத்தை சீராக வைத்திருக்க அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எரிபொருள் விற்பனை நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்பதுடன் விநியோகம் தடையின்றி நடைபெறுகிறது. ஆன்லைன் முன்பதிவு 84 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், வணிக சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *