இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு ரமலான் பெருநாள் எப்போது கொண்டாடப்படும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு ரமலான் பெருநாள் எப்போது கொண்டாடப்படும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

புனித ரமலான் மாதத்தின் ஒரு மாத கால நோன்பிற்குப் பிறகு, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஈகைத் திருநாளான ஈத்-உல்-பித்ரை உற்சாகமாகக் கொண்டாட உள்ளனர். ஹிஜ்ரி காலண்டரின் படி ஷவ்வால் மாத பிறை தென்படுவதைப் பொறுத்தே இந்தப் பெருநாள் தீர்மானிக்கப்படும். மார்ச் 19 அன்று பிறை தெரிந்தால், மார்ச் 20 அன்று இந்தியாவில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.

வானில் பிறை தெரிவதில் மாற்றம் இருந்தால், இப்பெருநாள் ஒரு நாள் தள்ளி மார்ச் 21 அன்று கொண்டாடப்படலாம். வழக்கமாக சவூதி அரேபியாவில் பிறை தெரிந்த அடுத்த நாள் இந்தியாவில் பண்டிகை கொண்டாடப்படும். அன்று காலை புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகை நடத்தி, இனிப்புகளைப் பகிர்ந்து, ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்து மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *