இந்தியாவின் எல்பிஜி தட்டுப்பாட்டை போக்க ஈரானின் அதிரடி நட்புக்கரம்
March 14, 2026

இந்தியாவின் எல்பிஜி தட்டுப்பாட்டைத் தீர்க்க ஈரான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போர்ச் சூழலிலும் ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவிற்கு எரிவாயு ஏற்றி வரும் இரண்டு கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை முன்னிறுத்தி இந்த முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது பாட்லி தெரிவித்துள்ளார்.
இந்த முடிவின் மூலம் நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டான காலங்களில் இந்தியா வழங்கிய ஆதரவை நினைவுகூர்ந்த ஈரான், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முன்வந்துள்ளது. தற்போது இந்திய டேங்கர் கப்பல்கள் தங்குதடையின்றி தங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன.