இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறு

இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறு

ஈரான் வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஈரான் தரப்பும் இத்தகைய சிறப்பு அனுமதி குறித்த தகவல்களை ஏற்கனவே மறுத்துள்ள நிலையில், வெளியுறவு அமைச்சகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் நிலவும் முடக்கம் காரணமாக இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் மற்றும் சிறு தொழில்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. போர்க்கால சூழலால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியைத் தீர்க்க இந்தியா தற்போது மாற்று வழிகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *