ஆஸ்கார் விருது விழாவிற்கு சென்றபோது பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் தம்பதி நூலிழையில் விபத்திலிருந்து தப்பினர்

ஆஸ்கார் விருது விழாவிற்கு சென்றபோது பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் தம்பதி நூலிழையில் விபத்திலிருந்து தப்பினர்

98வது அகாடமி விருது வழங்கும் விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் தம்பதிக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. பாதுகாப்பு காரணங்களால் டால்பி தியேட்டர் அருகே இவர்களது வாகனம் நிறுத்தப்பட்டதால், ஏற்பாட்டாளர்கள் இவர்களை கோல்ஃப் கார்ட் மூலம் அழைத்துச் சென்றனர். அப்போது வேகமாகச் சென்ற அந்த வாகனம் ஒரு வளைவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு பக்கம் சாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில், கோல்ஃப் கார்ட்டின் ஒரு சக்கரம் தரையிலிருந்து தூக்கப்பட்ட நிலையில் வாகனம் கவிழும் நிலைக்குச் சென்றது தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக பிரியங்காவும் நிக்கும் வாகனத்தை இறுகப் பிடித்துக் கொண்டதாலும், ஓட்டுநர் உடனடியாக வாகனத்தைக் கட்டுப்படுத்தியதாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த இக்கட்டான சூழலையும் கடந்து, இருவரும் பாதுகாப்பாக விழா மேடையை அடைந்து ரசிகர்களை கவர்ந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *