ஆப்பிள் விதையில் ஒளிந்திருக்கும் உயிர்க்கொல்லி விஷம் தெரியாமல் கூட விதைகளை மென்று சாப்பிடாதீர்கள்
December 28, 2025

ஆரோக்கியத்திற்கு ஆப்பிள் மிகச்சிறந்தது என்றாலும் அதன் விதைகளில் ‘சயனைடு’ எனும் கொடிய விஷம் உள்ளது. ஆப்பிள் விதைகளை முழுமையாக விழுங்கினால் பாதிப்பில்லை, ஆனால் அவற்றை மென்று சாப்பிடும்போது விதையிலுள்ள சயனோஜெனிக் சேர்மங்கள் இரத்தத்தில் கலந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
பெரியவர்களை விட குழந்தைகளுக்கு இந்த ஆபத்து அதிகம். ஒரு பெரியவர் உயிரிழக்க சுமார் 143 விதைகள் தேவைப்படும் நிலையில், குழந்தைகளுக்கு வெறும் 4 முதல் 5 விதைகள் கூட மரணத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே ஆப்பிள் சாப்பிடும் முன்போ அல்லது ஜூஸ் தயாரிக்கும் போதோ அதன் விதைகளை கவனமாக அகற்றுவது மிகவும் அவசியம்.