ஆன்லைன் கேமிங் போதையால் விபரீதம், செல்போனை பறித்ததால் மாணவன் தற்கொலை செய்த கொடூரம்
February 9, 2026

செய்தி பிரிவு : உங்கள் பிள்ளைகள் எப்போதும் செல்போன் கேம்களில் மூழ்கிக்கிடக்கிறார்களா? போபாலில் நிகழ்ந்த இந்த சோகம் ஒரு எச்சரிக்கை மணி. ஆன்லைன் கேமிங் போதைக்கு அடிமையான 8-ம் வகுப்பு மாணவன், பெற்றோர் செல்போனை பறித்த கோபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இது தற்கால சிறுவர்களின் மனநிலை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஆசிரிய தம்பதியின் ஒரே மகனான அந்த சிறுவன், ஏதோ ஒரு ஆபத்தான ஆன்லைன் டாஸ்க்கில் சிக்கியிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. கேமிங் பழக்கத்தால் அவன் தனிமையை விரும்பத் தொடங்கியதாக அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். டிஜிட்டல் உலகம் நம் குழந்தைகளை எப்படி மரணத்தின் விளிம்பிற்கு தள்ளுகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.