ஆதார் அட்டையில் பெரிய மாற்றம்! தந்தை/கணவர் பெயர் நீக்கம் – இனி என்ன வரும்?

ஆதார் அட்டையில் பெரிய மாற்றம்! தந்தை/கணவர் பெயர் நீக்கம் – இனி என்ன வரும்?

குடிமக்களின் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைக் கருத்தில் கொண்டு, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின்படி, இனி 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் ஆதார் அட்டைகளில் தந்தை அல்லது கணவரின் பெயர் இடம்பெறாது. அட்டையில் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி மட்டுமே காண்பிக்கப்படும்.

மேலும், புதிய ஆதாரில் பிறந்த தேதி மற்றும் மாதம் நீக்கப்பட்டு, பிறந்த வருடம் மட்டுமே குறிப்பிடப்படும். இருப்பினும், 18 வயதுக்குட்பட்டவர்களின் அட்டைகளில் தந்தையின் பெயர் வழக்கம்போல் அச்சிடப்படும். அனைத்து அசல் தரவுகளும் UIDAI தரவுத்தளத்தில் பாதுகாக்கப்படும் என்று ஆதார் மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *