ஆண்களே எச்சரிக்கை இந்த சாதாரண அறிகுறிகள் புற்றுநோயின் ஆரம்பமாக இருக்கலாம்

ஆண்களே எச்சரிக்கை இந்த சாதாரண அறிகுறிகள் புற்றுநோயின் ஆரம்பமாக இருக்கலாம்

செய்தி பிரிவு : உலகளவில் மரணத்தை ஏற்படுத்தும் முக்கிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. ஆண்களுக்கு விதைப்பையில் ஏற்படும் மாற்றங்கள், சிறுநீர் கழிப்பதில் சிரமம், அல்லது சிறுநீரில் இரத்தம் வருவது போன்றவை புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். மேலும், மூன்று வாரங்களுக்கு மேலாகத் தொடரும் இருமல், மலம் கழிக்கும்போது இரத்தம் வருதல் மற்றும் காரணமே இல்லாமல் உடல் எடை குறைவது போன்றவற்றை சாதாரண உடல்நலக் குறைவு என்று அலட்சியப்படுத்துவது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

தோலில் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத வாய்ப் புண் மற்றும் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் தீராத சோர்வு ஆகியவை லுகேமியா போன்ற புற்றுநோய்களின் எச்சரிக்கையாக இருக்கலாம். குறிப்பாகப் புகைபிடிப்பவர்களுக்குத் தொண்டையில் ஏற்படும் வலி அல்லது விழுங்குவதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். ஆரம்பக்கால அறிகுறியைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது மட்டுமே புற்றுநோயிலிருந்து உயிரைக் காக்க உதவும் சிறந்த வழியாகும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *