அரிஜித் சிங்கின் ஓய்வு அறிவிப்பால் வைரலாகும் விராட் கோலியின் பழைய உருக்கமான பதிவு

அரிஜித் சிங்கின் ஓய்வு அறிவிப்பால் வைரலாகும் விராட் கோலியின் பழைய உருக்கமான பதிவு

பாலிவுட் பின்னணிப் பாடகர் அரிஜித் சிங் திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 2016-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி பகிர்ந்த பழைய பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. அதில், தான் அரிஜித் சிங்கின் மிகப்பெரிய ரசிகன் என்றும், அவருடைய குரல் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு இதயத்தைத் தொடுவதாகவும் கோலி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

அரிஜித்துடன் பணியாற்றிய பாடகி சின்மயி ஸ்ரீபதா, அரிஜித் எப்போதும் புகழுக்கும் விளம்பரத்திற்கும் ஆசைப்படாத ஆன்மீகவாதி என்று நினைவு கூர்ந்துள்ளார். ‘தும் ஹி ஹோ’ பாடல் வெளியான காலத்திலேயே அவர் திரையுலகை விட்டு விலக விரும்புவதாகத் தெரிவித்திருந்ததாக சின்மயி கூறினார். அரிஜித்தின் இந்த முடிவால் சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு, கோலியின் பழைய பாராட்டுக்கள் தற்பொழுது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *