அம்மாவின் 20 ஆண்டு கால கனவை நனவாக்கி யுபிஎஸ்சி தேர்வில் மௌலீஸ்வரன் சாதனை

அம்மாவின் 20 ஆண்டு கால கனவை நனவாக்கி யுபிஎஸ்சி தேர்வில் மௌலீஸ்வரன் சாதனை

திருத்தணி அருகே கீழாந்தூரைச் சேர்ந்த மௌலீஸ்வரன், யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 410-வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். அவர் கருவில் இருந்த காலம் முதலே ‘நீ ஐஏஎஸ் ஆக வேண்டும்’ என்று கூறி வளர்த்த அவரது தாயின் கனவை இன்று நிஜமாக்கியுள்ளார். “நான் மௌலீஸ்வரன் ஐஏஎஸ் பேசுகிறேன்” என்று அவர் போனில் சொன்னபோது, மகிழ்ச்சியில் அவரது தாய் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.

பல்வேறு சவால்களைத் தாண்டி, தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் மற்றும் லயோலா கல்லூரியின் சமூகப் பணி அனுபவங்கள் இவருக்கு பெரும் உந்துதலாக அமைந்தன. விடாமுயற்சியும் முறையான பயிற்சியும் இருந்தால் எட்ட முடியாத இலக்கு எதுவுமில்லை என்பதை மௌலீஸ்வரனின் இந்த வெற்றி இளைஞர்களுக்கு பறைசாற்றுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *