அமெரிக்க ராணுவ ரகசியங்களை ஈரானுக்கு கசியவிடும் ரஷ்யாவின் உளவுத்துறை வியூகம்

அமெரிக்க ராணுவ ரகசியங்களை ஈரானுக்கு கசியவிடும் ரஷ்யாவின் உளவுத்துறை வியூகம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவும் சூழலில், அமெரிக்க ராணுவ தளங்களின் நடமாட்டம் குறித்த ரகசிய தகவல்களை ரஷ்யா ஈரானுக்கு வழங்கி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் அதிநவீன செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் பெறப்படும் இந்த தரவுகள், ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அமெரிக்க இலக்குகளை துல்லியமாக தாக்க உதவுகின்றன.

உக்ரைன் போரில் ஈரானிய ட்ரோன்களைப் பயன்படுத்தியதற்குப் பிரதிபலனாக ரஷ்யா இந்த உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் சீனாவின் தலையீடு ஏதுமில்லை என வாஷிங்டன் போஸ்ட் உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் இந்த அதிரடி நடவடிக்கை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *