அமெரிக்க உளவுத்துறை அறிக்கையால் பரபரப்பு ஈரானின் அணுசக்தி தளம் இன்னும் பாதுகாப்பாக உள்ளதா

அமெரிக்க உளவுத்துறை அறிக்கையால் பரபரப்பு ஈரானின் அணுசக்தி தளம் இன்னும் பாதுகாப்பாக உள்ளதா

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியிலும், அந்நாட்டின் அணுசக்தி திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருவது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க தாக்குதலில் அழிந்ததாகக் கருதப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம், தற்போது ஈரானின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருக்கலாம் என உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சிதைந்த பகுதிகளுக்கு இடையே உள்ள சுரங்கப்பாதை வழியாக இந்த யுரேனியத்தை ஈரான் வேறு இடத்திற்கு மாற்ற முயல்வதாகக் கூறப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழலில், யுரேனிய இருப்பைப் பாதுகாக்க நிலப்பரப்பு வழியாகப் படைகளை அனுப்ப அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருகிறார். அதேவேளையில், ஈரான் தனது அணுசக்தி கையிருப்பு குறித்த தகவல்களைப் பகிர மறுப்பதோடு, சர்வதேச ஆய்வாளர்களுக்கும் அனுமதி வழங்கவில்லை. இது ஈரானின் அடுத்தகட்ட நகர்வு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *