அணு ஆயுதப் போரினால் உலகம் அழியுமா உயிர் பிழைக்கப்போகும் அந்த 2 நாடுகள் எவை

உலகில் உள்ள 12 ஆயிரம் அணு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டால் பூமியில் மனித இனமே அழியும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. அணுவெடிப்பினால் ஏற்படும் கரும்புகை சூரிய ஒளியை மறைத்து பூமியின் வெப்பநிலையை மைனஸ் 30 டிகிரி வரை குறைக்கும். இதனால் ஏற்படும் ‘அணுசக்தி குளிர்காலம்’ காரணமாக அமெரிக்கா போன்ற நாடுகள் பனிப்பாலைவனமாக மாறி சுமார் 500 கோடி மக்கள் பசியால் உயிரிழக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த பேரழிவிலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தப்பிப்பிழைக்க அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். கடல் சூழ்ந்த புவியியல் அமைப்பால் அங்கு விவசாயம் ஓரளவிற்கு சாத்தியமாகும் என்றாலும் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க மக்கள் நிலத்தடி அறைகளில் வாழ வேண்டியிருக்கும். மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் நிலவும் தற்போதைய பதற்றம் உலகை ஒரு பெரிய அணுசக்தி பேரழிவை நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறது.