அகமதாபாத் விமான விபத்து திட்டமிடப்பட்டதா? மத்திய அரசு அதிரடி விளக்கம்

அகமதாபாத் விமான விபத்து திட்டமிடப்பட்டதா? மத்திய அரசு அதிரடி விளக்கம்

கடந்த ஆண்டு அகமதாபாத்தில் 260 பேரின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா விமான விபத்து, ஒரு திட்டமிடப்பட்ட சதி என இத்தாலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விமானத்தின் என்ஜின்கள் வேண்டுமென்றே அணைக்கப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களின் இந்த தகவல் வெறும் ஊகமே தவிர, இதில் உண்மை ஏதுமில்லை என அரசு மறுத்துள்ளது. விமான விபத்து விசாரணை பிரிவு (AAIB) தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதால், விசாரணை அறிக்கை வரும் வரை வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியிலான முழுமையான ஆய்வு முடிந்த பின்னரே விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *