NDA கூட்டணியில் விஜய்யின் தவெக? முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

NDA கூட்டணியில் விஜய்யின் தவெக? முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்டிஏ கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார். விஜய்யின் சிபிஐ விசாரணை ஒரு வழக்கமான நடைமுறை என்றும், அதனை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திமுகவை வீழ்த்துவதே அதிமுகவின் நோக்கம் என்றும், விஜய் ஏற்கனவே திமுகவை தனது அரசியல் எதிரியாக அறிவித்துள்ளதாகவும் ராஜூ குறிப்பிட்டார். கூட்டணி குறித்த இறுதி முடிவை அந்தந்த கட்சிகளே எடுக்க வேண்டும் என அவர் மேலும் விளக்கமளித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *